Pages

VEDA-வேதம்

வேதத்துக்கு ஆரம்பமும் இல்லை, முடிவும் இல்லை. இதை ஒருவரும் இயற்றவில்லை. மஹரிஷிகளால் த்யானத்தில் காணப்பட்டவை. இந்த மஹரிஷிகள் "மந்த்ரத்ரஷ்டா" எனப்பட்டனர். வேதம்   'அபெளருஷேயம்' எனப்படும்.

 அதாவது ஒருவராலும் இயற்றப்படாதது.  உலகில் வேறு எந்த நூலோடும் ஒப்பிட இயலாதது.  இது எப்போது தோன்றியது என்பதை வறையறுத்து சொல்லவும் இயலாது.  பகவானின் மூச்சுக்காற்று என்று சொல்லப்படுவதால் பகவானைப் போலவே வேதமும் ஒருவராலும் தோற்றுவிக்கப்படாதது.  வேதம் மிக கவனமாக பல லட்சக்கணக்கான ஆண்டுகளாக முன்னோர்களால்  எழுத்துப்பிசகாமல் ஸ்வரம் பிசகாமல் மனனம் பண்ணி, வழிவழியாக இப்போதுள்ள தலைமுறை வரை கொண்டுவந்திருப்பது வேறு எங்கும் காணாத, கேட்கப்ப்டாத விந்தை.  உலகத்தில் மிகமிகப் பழமையானவை  வேதங்கள். 


ஆசார்யன்  உபதேசிக்க  சிஷ்யன் கேட்க, பிறகு அந்த சிஷ்யன் தன் சிஷ்யனுக்கு அல்லது சிஷ்யர்களுக்கு சொல்ல இப்படி வேதம், வழிவழியாக சொல்லப்பட்டது. இதை  "எழுதாக் கிளவி"  என்று சொல்வர். 


STILL WANT TO READ IN ENGLISH CLICK HERE: VEDA CHANTING

No comments:

Post a Comment