பின்னாலிருந்து (முந்தைய விஷயங்களை) படிக்கவேண்டும்.
செளலப்ரகரணம்
செளலப்ரகரணம்
(சிகை)குடுமி வைக்கும் ஸம்ஸ்காரத்ற்கு செளலம் என்று பெயர். இதை ஓன்று, மூன்று அல்லது ஐந்தாம வயதில் செய்ய வேண்டும் தலையில உள்ள முடியை வபனம் செய்வதே செளலம். முதலில் செய்யும் வபனத்துக்கு தர்ப்பைகளை உபயோகப்படுத்திக்கு கொண்டு பின்னால் செய்யும் வபனத்துக்கு கத்தியை உபயோகிக்கவேண்டும். மந்திரபூர்வமாக செளலம் அமைந்திருக்கிறது. கத்திக்கு கூட மந்திரம் உண்டு. நெற்றிக்கு மேல் ஓரு விரல் கடை (நான்கு விரல்களின் அகல அளவு)க்கு மேல் வட்டமாக குடுமி வைத்து, சுற்றிலும் அந்த அளவு போக மீதி மயிர்களை எடுத்துவிட வேண்டும்.
கத்திரிக்கப்பட்ட தர்ப்பைகளையோ அல்லது கேசத்தையோ நாணல் புதரில் சேர்த்துவிட வேண்டும்.
உபநயநத்தில் செளலம் ஸிமந்தத்தில் வகுடுபிளத்தல்போலவே ஓரு கர்மாவாகும்.
இதில் க்ருஹஸ்த்தனுக்கு உண்டான விஷயம்.
ஸர்வாங்க வபனம் மாததிற்கு ஓரு முறை அவசியம். முதலில் கைகக்ஷகள் பிறகு முகம். பிறகுதான் தலையாம்.
இல்லையினில் இது தீட்டோடு கருதப்படும். மேலும் ஓர் ஆஸமநம் செய்யகூட அருகதையில்லை.
ஸார்த்தமோ அல்லது பித்ருகார்யமோ செய்யவேண்டி வந்தால், திருப்பதிக்கு மயிரை காணிக்கையாக கொடுத்திருந்தாலோ அல்லது நோயாலோ தலையில் முடியில்லாமிருந்தால் பசுவின் வாலின மயிரையோ அல்லது தர்ப்பையோ தலையில் வைத்துக் கொண்டுதான் கார்யம் செய்யவேண்டும். தலையில் வைத்துக்கொள்ள முடியாவிட்டால் காதில் வைத்துக் கொண்டுதான் கார்யம் செய்யவேண்டும்.
என்று வபனம் கூடாது என்பது பற்றி பிறகு பார்ப்போம்.
........................................................................இன்னும் வரும்.
No comments:
Post a Comment